கணவரின் சடலத்தை அடக்கம் செய்த அடுத்த நிமிடம்..! வீட்டில் தனியாக இருந்த மனைவி எடுத்த விபரீத முடிவு! கதறிய மகள்கள்! அதிர்ச்சி காரணம்!

கணவர் கொரோனாவால் உயிரிழந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் இன்றுவரை 82,275 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 45,500 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 1,079 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு  முழுவதும் தற்போது சில தளர்வுகள் உடன் ஜுன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் ராமபிரபாவதி. ராமபிரபாவதி தனியார் பள்ளி ஒன்று ஆசிரியராக பணியாற்றி வந்தார்.  இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் பிரபாகருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பிரபாகர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவருடைய உடலானது மதுரையிலிருந்து விருதுநகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பிரபாகருக்கு நோய்தொற்று உறுதியானதால், அவருடைய மகள்கள் மற்றும் மனைவிக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மகள்கள் இருவரும் பரிசோதனைக்கு சென்றுவிட ராம பிரபாவதி கணவரை நினைத்து அழுது கொண்டே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திடீரென்று வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.