கொளுந்தியாளுடன் மது அருந்திய கணவன்! கண்டுபிடித்த மனைவி அபூர்வா எடுத்த பகீர் முடிவு!

பிரபல அரசியல் பிரமுகரின் மகன் தனது அறையில் இறந்து கிடந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.


ரோகித் என்பவர் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு, தான் தான் என்.டி.திவாரியின் மகன் என்பதை நிருபித்தார். டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகே என்.டி.திவாரி இதனை ஒப்புக்கொண்டு அரசியலிலிருந்து விலகினார். ரோஹித்தின் மனைவி அபூர்வா. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

டெல்லியில் உள்ள டிபென்ஸ் காலனியில் வசித்து வந்தார்.  வாக்களிப்பதற்காக தன் சொந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு காரில் சென்றார். அப்போது தன் கொளுந்தியா உடன் காரின் பின் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் மனைவி வீடியோ கால் செய்துள்ளார். இந்நிகழ்வை கண்டவுடன் அவர் ஆத்திரமடைந்து போனை கட் செய்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய உடன் இதுப்பற்றி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு ரோகித் ஒரே கிளாஸில் குடிப்போம் என்று கூறியுள்ளார். பல தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். இதனால் கோபமடைந்த அபூர்வமான தன் கைகளால் ரோஹித்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மது போதை முற்றியதால் ரோஹித்தால் எதிர்க்க முடியாது போனது என்று பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.