கணவன் பற்றிய ரகசியம் இப்போது தான் தெரிந்தது..! என் உயிருக்கு ஆபத்து! மகன்களுடன் கதறும் மனைவி!

தன் கணவர் ரவுடி என தெரிந்து மனைவி விவாகரத்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவமானது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் ஆக்கூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள தென்றல் நகர் எனும் பகுதியில் ஜான்சி என்ற பெண் வசித்து வருகிறார். அரியலூர் மாவட்டத்திலுள்ள குலமாணிக்கம் எனும் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். பாஸ்கருக்கும், ஜான்சிக்கும் 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு ஜான் ரோசர், ஆரோர் என 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே சில வருடங்கள் கழித்து பாஸ்கர் ரவுடி தொழில் செய்து வருபவர் என்பதை ஜான்சி கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து பாஸ்கரிடம் கேட்டபோது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும் அடிக்கடி காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்கு வந்து சென்றதால் ஜான்சி மனமுடைந்து போனார். 

இதனால் பாஸ்கரிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஜான்சி விவாகரத்து கேட்டவுடன் ஆத்திரமடைந்த பாஸ்கர் தன்னுடைய அடியாட்களை வைத்து ஜான்சியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து ஜான்சி செம்பனார் காவல் நிலையத்தில் புகாரளித்தும் காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஜான்சி இந்த வழக்கு குறித்து நாகை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது தென்றல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.