கணவர் குடிகாரர் என்பதால் வாழ்க்கையை நடத்துவதற்கு வேறு வழியின்றி மனைவி குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வரும் அவலமானது ராமேஸ்வரத்தில் அரங்கேறியுள்ளது.
கணவன் எந்த நேரமும் குடி..! போதை..! குழந்தைகளை காப்பாற்ற தெருத் தெருவாக சென்று தாய் செய்த செயல்! ராம்நாதபும் பகீர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் திசையன்விலை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட பெடல் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. அவருடைய கணவரின் பெயர் சாமிக்கண்ணு. இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே சாமிகண்ணு குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்குள் கொடுக்காமல் மது அருந்துவதற்கு உபயோகித்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்த இயலாமல் முத்துலட்சுமி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் குடிபோதையில் மனைவியை அடித்து பல நாட்கள் துன்புறுத்தியுள்ளார்.
மேலும் குழந்தைகளையும் குடிபோதையில் கடித்து சித்திரவதை செய்துள்ளார். குடிபோதையில் நிச்சயம் கணவர் தன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவார் என்று நினைத்தார் முத்துலட்சுமி. உடனடியாக 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ராமேஸ்வரத்திற்கு சென்றார்.
கொண்டு சென்ற பணம் தீர்ந்தவுடன், முத்துலட்சுமியால் குழந்தைகளின் பசியை தீர்க்க இயலவில்லை. 3 குழந்தைகளையும் பிச்சை எடுக்க வைத்துள்ளார். தொடர்ந்து கோவிலின் வாசலில் 3 குழந்தைகளை வைத்து முத்துலட்சுமி பிச்சை எடுத்து வந்ததை கண்ட காவல்துறையினர், அவர் குழந்தையை கடத்தி வந்திருப்பார் என்று எண்ணி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால் முத்துலட்சுமி தன்னுடைய நிலையை குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் காண்பித்து விளக்கிக்கூறிய பிறகு, காவல்துறையினர் குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்தனர். இந்த அவலமானது ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.