காதலியுடன் கணவன்! கையும் களவுமாக பிடித்த மனைவி! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

மனைவி ஒருவர் கணவன் மற்றும் அவரது கள்ளக்காதலியை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமானது ஹைதராபாத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநிலத்தில் கொட்ட கொம்முகூடம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுஜன்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் தொடக்கத்தில் நன்றாக வாழ்ந்து வந்தனர். காலம் செல்ல செல்ல இருவரது வாழ்விலும் மனக்கசப்பு ஏற்பட தொடங்கியது.

லட்சுமணன் அவரை விட்டு பிரிந்தார். பின்னர் அவருக்கு கூக்கட்பள்ளி என்ற பகுதியில் வசிக்கும் அனுஷா என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனுஷாவிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். நெருக்கமானது சில நாட்களிலேயே கள்ளக்காதலாகவும் மாறியது. பின்னர் லட்சுமணன் அனுஷாவின் வீட்டிலேயே தங்கிவிட்டார். 

இந்த செய்தியை அறிந்த சுஜன்யா லக்ஷ்மணனிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் லட்சுமணன் அதற்கு இடம் கொடுக்காமல் அனுஷாவுடனே உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

சுஜன்யா விவாகரத்து கேட்டு தன் கணவரான லட்சுமணனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கும் லட்சுமணன் பதில் அளிக்கவில்லை. இதனால் சுகன்யா மிகவும் ஆத்திரப்பட்டார்.

நேற்று காலை தன் உறவினர்களுடன் சுஜன்யா அனுஷா தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் கணவர் மற்றும் கணவரின் கள்ளக்காதலியான அனுஷாவை அடித்து துவம்சம் செய்துவிட்டார். பின்னர் கூக்கடப்பள்ளி காவல்நிலையத்தில் கணவரை பற்றி புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் லக்ஷ்மணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவமானது ஹைதராபாத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.