ஒரே நேரத்தில் ரெண்டு பொண்டாட்டி..! அதுவும் போதாமல் பிரபல பாடகரின் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்து கொண்டதற்காக பிரபல பாடகரின் மகன் கைது செய்யப்பட்டிருப்பது புளியந்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையில் புளியந்தோப்பு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ராஜா தெருவில் பழனி என்ற பிரபல கானா பாடகர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் தரணி.  இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி  இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 

இதனிடையே தான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதை மறைத்து தரணி, அதே பகுதியை சேர்ந்த விஜயாபானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், தன் மனைவியிடம் 20 சவரன் நகைகளை வரதட்சணையாக பெற்றுள்ளார். மேலும் 30 சவரன் நகைகளை வரதட்சணையாக தரவேண்டுமென்று அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். 

அடுத்த சில நாட்களிலேயே தரணி ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதை விஜயபானு கண்டுபிடித்துள்ளார். உடனடியாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தரணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.