புருசன்னா ஏன் அட்ஜஸ்ட் பண்ணிக்கமாட்டியா? தகாத உறவில் இருக்கும் மனைவி காதலனுடன் சேர்ந்த அரங்கேற்றிய பகீர்!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட கீழப்பட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவியின் பெயர் ஜோதிகா. ஜோதிகாவின் வயது 27. இதனிடையே கடந்த சில வருடங்களாக ஜோதிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயராமன் என்ற 24 வயது இளைஞருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவிக்கு எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவர் கேட்காத காரணத்தினால் கருப்பையா ஊர் முன்னிலையில் ஜோதிகாவை விவாகரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிகா தன்னுடைய கள்ளக்காதலனுடன் இணைந்து கொண்டு கணவரை தாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். 

அதன்படி ஜோதிகா தன்னுடைய கள்ளக்காதலரான கருப்பையா, ஆதம்மாள் மற்றும் சின்னசாமி ஆகியோரை அழைத்துக்கொண்டு தன்னுடைய கணவரான கருப்பையாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த கருப்பையா அவருடைய சகோதரர் மீனாட்சி சுந்தரத்தை 4 பேரும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனால் இருவரும் பலத்த காயமடைந்தனர். 4 செய்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எதிராக கருப்பையாவின் மற்றொரு சகோதரரான குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஜோதிகா, விஜயராமன், சின்னசாமி மற்றும் ஆதம்மாள் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.