விவாகரத்துக்கு விண்ணப்பித்த மனைவி! அடுத்த நிமிடம் துடிதுடித்து உயிரிழந்த கணவன், குழந்தை! அதிர வைக்கும் சம்பவம்!

மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்தவுடன் தாங்க முடியாத கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டில் சரதோவ் என்ற நகரம் அமைந்துள்ளது.  இங்கு ரோமன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் ஜரினா. இத்தம்பதியினருக்கு சோஃபியா என்ற 4 வயது பெண் குழந்தையும், ஆர்யோம் என்ற 1 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில், ஜரினா தான் பணியாற்றும் இடத்தில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் ரோமனிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக கூறியிருந்தார். இதனால் மனமுடைந்தார் ரோமன். சில நாட்களிலேயே ஜரினா விவாகரத்தை பதிவு செய்தார். இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு பால்கனியிலிருந்து கீழே விழுவது போன்று புகைப்படம் ஒன்றை எடுத்து மனைவிக்கு அனுப்பியிருந்தார்.

இதனால் அதிர்ந்த மனைவி வாடகை கார் மூலம் தன்னுடைய குடியிருப்புக்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள்ளேயே ரோமன் தன்னுடைய குழந்தைகளுடன் 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திலேயே ரோமன் மற்றும் ஆர்யோம் உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த சோஃபியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் தங்கள் தற்கொலைக்கு தன் மனைவியை காரணம் என்று கடிதம் எழுதிவிட்டு இறந்துள்ளனர்.

இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.