நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே 2-வது திருமணம் செய்த நபர் திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதால் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
ஒரே ஒரு போட்டோவை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்! தற்கொலை செய்த மனைவியும், மாமியார்!

ராதாபுரத்தை அடுத்த
ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்த மாயராமன் - வைரமுத்துவுடன் தம்பதிக்கு கடந்த 15
ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை.
குழந்தை இல்லாததை
காரணம் காட்டி வைரமுத்துவின் தாயிடமிருந்து மாயராமன் சொத்துக்களை எழுதி வாங்கியதாக
கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகும் 2-வது திருமணம் செய்யப்போவதாக மாயராமன் மனைவி
வைரமுத்துவை தொடர்ந்து மிரட்டி வந்தார்.
அதோடு நிற்காமல் தனது
மிரட்டலை செயலாக்கிய மாயராமன், தனது 2-வது திருமணத்தை பேஸ்புக்கிலும் பதிவிட்டார்.
அது குறித்து புகார் அளிக்க வைரமுத்து தனது தாயாருடன் ராதாபுரம் காவல்
நிலையத்துக்குச் சென்றார்.
ஆனால் போலீசார் புகாரை
வாங்க மறுத்து இருவரையும் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறாது. அதையடுத்து
அவர்கள் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்றனர்.
ஆனால் அங்கும் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்த வைரமுத்துவும் அவரது தாயாரும் விஷம்
அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.
தற்கொலை செய்துகொள்ளும்
முன் அவர்கள் எழுதிவைத்த கடிதம் கிடைத்துள்ள நிலையில் அதனைக் கொண்டு போலீசார்
விசாரணை மேற்கொண்டுள்ளனர் .