என் தாயும், சகோதரியும் ஒரே ஆணுடன் உறவில் இருந்தனர்! தந்தை மரணம் குறித்து மகன் கூறிய பகீர் தகவல்!

தமிழகத்தில் தாயும் மகளும் ஒரே ஆணுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டதை பற்றி அறிந்துகொண்ட நபரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து காணவில்லை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கைலுதாஸ் மற்றும் சரிதா தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு தயானந்த குமார் மற்றும் தேவேந்திரன் என இரு மகன்களும், ஜூலி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டிலேயே மளிகைக்கடை ஒன்றை நடத்திக் கொண்டும் அதோடு இணைந்தவாறு ஹோட்டலையும் நடத்தி வருகின்றனர். இவர்களின் மூத்த மகனான தயானந்த குமார் , பாங்கா மாவட்டத்தில் ராஜ்வுனில் வேலை செய்து வருகிறார். பணியில் விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வருவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் தயானந்த குமார்.

அப்படியாக விடுமுறை கிடைத்த நாளில் தன்னுடைய குடும்பத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்பொழுது அவரது தாயார் சரிதா தேவியும் ஜூலியும் சோகமாக அமர்ந்து இருந்தனர். உடனே தயானந்த் தந்தை எங்கே என்று இருவரையும் பார்த்து கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும் அவர்கள் கூறிய பதில் தயானந்த்க்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தயானந்த் தன்னுடைய தந்தையை காணவில்லை என்று கூறி அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் காணாமல் போனதாக கூறப்பட்ட கைலுதாஸின் மனைவி மற்றும் மகளை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அந்தப்பகுதி கிராமவாசிகள் கைலுதாஸின் வீட்டு முற்றம் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல் நிலையத்தில் வந்து கூறியிருக்கின்றனர். போலீசார் கைலுதாஸின் வீட்டில் மற்ற பகுதியில் இருக்கும் இடத்தை தோண்டி பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காணாமல் போனதாக கூறப்பட்ட கைலுதாஸின் உடல் அங்கு இருந்து எடுக்கப்பட்டது. இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இது தொடர்பாக கைலுதாஸின் மனைவி மற்றும் மகளை போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணை செய்த பொழுது இருவரும் முன்னுக்கு பின்னாக முரண்பாடாக பேசி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை கிடுக்குப்பிடி விசாரணை செய்த பொழுது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அதாவது கைலுதாஸின் மனைவி சரிதா தேவிக்கும், அவளது மகள் ஜூலிக்கும் பொதுவாக பால்வா கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் பழக்கம் ஆகி இருக்கிறார். நாளடைவில் தாய்-மகள் இருவருமே தினேஷிடம் நெருங்கி பழகியுள்ளனர். 

இதுகுறித்து கைலுதாஸுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியையும் மகளையும் கண்டித்திருக்கிறார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி சரிதா, தன் மகளிடம் தந்தையைக் கொலை செய்து விடு என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்டுக் கொண்ட ஜூலி உடனடியாக தன்னுடைய தந்தையை கொலை செய்து இருக்கிறார். கொலை செய்த பின் கைலுதாஸின் உடலை அவர்களது வீட்டின் முற்றம் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு கைலுதாஸ் காணாமல் போனதாக நாடகமாடி உள்ளனர். இதனை அவர்களே போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். உடனே போலீசார் அந்த கைலுதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.