மோடியை போய் ஏன் கட்டி பிடிச்சீங்க? மாணவியின் சுவையான கேள்வி! ராகுலின் சூடான பதில்!

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி ஒருவர், ராபர்ட் வதேரா குறித்து ஏன் எதுவும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.


மத்திய அரசின் கையில் சி.பி.ஐ. அமைப்பு இருக்கிறது. அதன் மூலம் எப்படியெல்லாம் திசை திருப்பமுடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள் என்று பதில் சொன்ன ராகுல், இந்தக் கேள்வியை அப்படியே மோடி பக்கம் திசை திருப்பினார்.

அனில் அம்பானிக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் ரஃபேல் ஒப்பந்தம் கொடுக்கிறார்கள். அதைப் பற்றி கேள்வி எழுப்பினால், வதேரா குறித்து பேச வைக்கிறார்கள். ஊழல் பற்றித்தான் நாம் பேச வேண்டும் என்று சொன்னார்.

மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளானால் மோடியாக இருந்தாலும் சரி, வதேராவாக இருந்தாலும் சரி விசாரணைக்கு ஆளாக வேண்டும் என்று ராகுல் பதில் அளித்தார். அந்த வகையில் ரஃபேல் குற்றச்சாட்டில் மோடி பெயர் இருப்பதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ராகுல்.

மேலும், நரேந்திர மோடியால் இப்படி ஓப்பனாக கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியுமா, அதற்கான தகுதி இருக்கிறதா என்று கேட்டு மாணவிகள் மத்தியில் நரேந்திர மோடி மீதான மதிப்பை உடைத்துத் தள்ளிவிட்டார்.

காஷ்மீர் பிரச்னை நீண்டுகொண்டே செல்கிறது என்ற கேள்விக்கு, எனக்கு அந்தப் பிரச்னை என்னவென்று முழுமையாகத் தெரியும். தீவிரவாதம், மக்கள் பிரச்னைகளை தெரியாமல் அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்றார்.

ஏன் மோடியை கட்டிப்பிடித்தீர்கள் என்ற கேள்விக்கு தயக்கமின்றி பதில் அளித்தார். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி எப்போதும் கோபமாகத்தான் இருக்கிறார். என்னால் முடிந்தவரை அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். 

காரணமே இல்லாமல் கோபமாக இருக்கும் பிரதமரைப் பார்த்து பரிதாபப்பட்டேன். நாங்கள் கடந்த முறை கடுமையான தோல்வியை சந்தித்தோம். அதற்காக கோபப்பட முடியாது என்பதை கண்டுபிடித்தேன். கூடுதலாக மக்களுடன் பழக வேண்டும். நமது நாட்டின் அடிப்படையே அன்புதான். அதைத்தான் மோடிக்கு உணர்த்த நினைத்தேன். அதனாலே கட்டிப்பிடித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.