நகரத்தில் ஃபிளாட்டில் வசிக்கும் நபர்கள் வீட்டு வாசலில் கோலம் போட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் அவர்கள் சாமி படத்துக்கு முன் சிறிய கோலமாவது போட வேண்டும்.
வீட்டு வாசலில் கோலம் போடுவதேன்? தமிழ் கலாச்சரத்தின் ரகசியம்!!
கோலம் போடும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து கோலம் போட வேண்டும்.வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலம் போட வேண்டும். கோலத்தில் தவறு ஏற்பட்டால் காலால் அழிக்காமல்,கையால் அழிக்க வேண்டும்.
வீட்டின் வெளி முற்றம், படிகள், திண்ணை, நடை, உள்முற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டில், துளசி மாடம், பூஜை அறை, இவற்றில் கோலமிடல் வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலம் போடும் போது எறும்பு போன்ற சிறு உயிர்களின் பசியைப்போக்கிய புண்ணியம் கிடைக்கும்.
அதே போல் அமர்ந்து கோலம் போடக்கூடாது. வேலையாட்கள் வைத்தும் கோலம் போடக்கூடாது.சுபகாரியங்களின் போது இரட்டைக்கோடுகள் வருகின்ற மாதிரி கோலம் போடுவது நல்லது.
கோலம் போடும் பெண்களுக்கு இடுப்புவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் எட்டிப் பார்க்காது என்பதும் கூடுதல் அனுகூலம்.