விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்ததன் வரலாறு!

விநாயகர் கடவுள் கணபதி ,ஆனைமுகன், கஜமுகன் ,விக்னேஸ்வரர் என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறார் .


ஆனால் விநாயகருக்கு முதன்முதலில் வைக்கப்பட்ட பெயர் பிள்ளையார் தான் அந்த பெயர் அவருக்கு எப்படி உருவானது என்பதை பற்றிய வரலாற்றை நாம் காண்போம் .

ஒரு முறை சிவபெருமான் வெளியே சென்றபோது , பார்வதி தேவி நீராடச் சென்றிருந்தார். அப்போது தனது காவலுக்காக யாரும் இல்லை என்பதை உணர்ந்த பார்வதிதேவி , நீராடுவதற்காக வைத்திருந்த சந்தன குழம்பை எடுத்து ஒரு உருவம் செய்து அதற்கு உயிரூட்டினார் . பார்வதி தேவியால் உயிரூட்டபட்டதால் அவரின் முதல் குழந்தையானார் விநாயகர்.

எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்று விநாயகரிடம் கூறிவிட்டு பார்வதிதேவி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் அங்கே வந்த சிவபெருமானை உள்ளே செல்ல அனுமதிக்காததால் சிவபெருமானுக்கும் பிள்ளையாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் விநாயகரின் தலையை சூலத்தால் வெட்டினார் . பின்னர் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட குழந்தை தான் விநாயகர் என்ற உண்மையை அறிந்த சிவபெருமான், தனது பூதகணங்களை அழைத்து பூவுலகில் முதலில் பார்க்கும் மனத்தின் தலையை கொண்டு வருமாறு அவர்களுக்கு ஆணையிட்டார் . அவர்களும் முதலில் பார்த்த யானையின் தலையை வெட்டி சிவபெருமானிடம் கொண்டுவந்தனர் .சிவபெருமானும் யானைத் தலையை விநாயகருக்கு பொருத்தி அவரை உயிர்பெற செய்தார் .

பின்னர் நீராடிவிட்டு வெளியே வந்த பார்வதி தேவி சிவபெருமானிடம் ,இந்தப் பிள்ளை யார் என்று கேட்டார் . பின்னர் சிவபெருமான் நடந்ததைக் கூறி பார்வதிதேவிக்கு நடந்த உண்மையை விளக்கினார் . இதன் காரணமாகத்தான் முதன்முதலில் விநாயகர் பிள்ளையார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.