கணபதி ,விக்னேஸ்வரன், கஜமுகன் என்று விநாயகர் அழைக்கப்படுவதற்கு காரணம் இதுதான்!

விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


முழுமுதற் கடவுளான விநாயகர் ,கணபதி ஆனைமுகன் விக்னேஷ்வரன் கஜமுகன் என்ற பல்வேறு பெயர்களால் பக்தர்களால் அழைக்கப்படுகிறார் . விநாயகருக்கு இந்த பெயர்கள் உருவான காரணங்களை இனி நாம் காண்போம் .

பூதகணங்களுக்கு எல்லாம் அதிபதி என்பதால் விநாயகர் கணபதி என்று அழைக்கப்படுகிறார்.விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் அதாவது பிரச்சனைகளை தீர்க்கும் கடவுள் என்பதால் விநாயகரை விக்னேஸ்வரன் என்று அனைவரும் அழைக்கின்றோம்.

கஜம் என்றாலும் அவனை என்றாலும் யானையைக் குறிக்கும். விநாயகர் யானை முகம் கொண்டதால் கஜமுகன் மற்றும் ஆனைமுகன் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் .