உதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..? திடீர் பல்டி ஏன்..?

தி.மு.க. கூட்டணியில் சுமார் 200 இடங்களில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிறிய கட்சிகள் எல்லாமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.


இந்த நிலையில், திமுகவின் சின்னத்தில் நிற்க தயார் என்று திருமாவளவன் கூறியிருக்கும் விவகாரம் அக்கட்சியில் பெரும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது.. பலரும் திருமாவை தொடர்புகொண்டு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்க்ள். இதையடுத்து மாலையில் பேசிய திருமா, தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், சீமான் ஆகிய கட்சிகள் தமிழகம் முழுக்க வேட்பாளர்களை நிறுத்துவதால் பொதுச் சின்னம் கொடுக்கப்படுகிறது. ஆனால், திருமா ஒருசில தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சின்னம் ஒதுக்கப்படும். இந்த குழப்பத்தை தீர்க்கவே அப்படி சொன்னதாக திருமா விளக்கம் தெரிவித்துள்ளார். 

திமுகவின் சின்னத்தில் நிற்கும் பட்சத்தில், பிற கட்சிகளில் இருந்து தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏகள் சட்டமன்றத்தில் கூட சுதந்திரமாக செயல் பட முடியாது. அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டையே பிற கட்சிகளும் எடுக்கவேண்டும் என்கிற சூழல்கள் ஏற்படும் என்று பலரும் எச்சரிக்கை செய்யவே, சட்டென்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் திருமா.