பெண்கள் காலில் கறுப்புக்கயிறு கட்டும் ரகசியம் என்ன தெரியுமா?

கருப்பு நிறங்கள் பெரும்பாலானோர் துக்க நிகழ்விற்கு பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் கருப்பு நிறத்திலான உடைகளை அணிய மாட்டார்கள்.


கருப்பு நிற கயிறுகளை காலில் காட்டுவதால் தீய சக்திகள் நம்மை நெருங்காது. மேலும் தீய சக்திகளின் தாக்கம் மற்றும் செய்வினை சூனியத்தில் இருந்தும் நம்மை பாதுக்காக்கும். பிறரினால் ஏற்படும் கண் திருஷ்டி போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

இதுமட்டுமல்லாது கால்களில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றினால் சனி பகவானின் பார்வை வேகத்தை குறைக்கும் மகிமையும் இந்த கருப்பு கயிருக்கு உள்ளது. கருப்பு கயிறை நாம் கட்டியிருந்தால் நம்மை அறியாமல் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும். தீராத நீண்ட கால நோய்களும்., உடல் நல குறைபாடும் உள்ள நபர்கள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் கருப்பு கயிறை வைத்து கட்டிக்கொள்ளலாம்.

கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12  மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு.  வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.

கருப்புக்கயிறு எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தை குறைக்கிறது. பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை காலில் கட்டிவிடுவது மிகச்சிறப்பு என்ற நம்பிக்கை நிலவுகிறது.