இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

இந்தியாவில் நாற்பது சதவீத பெண்கள், மாதவிடாய் நின்றபின் எலும்பு அரிப்பு நோய் ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.


இந்த நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக
இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு முறிவை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு பெண் தன்  வாழ்நாளில் எலும்பு அரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறார்.

 

ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் பாதிப்படையக் காரணம், பெண்களுக்கு ஆண்களை விட எலும்புத் தசைகள் குறைவு என்பதுதான். மேலும்  மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலவீனம்  அடைவதும் முக்கிய காரணமாகும். இது ஆஸ்டியோபொரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் "D"  குறைபாடும் முக்கியக் காரணம். ஆண்களைப் பொறுத்தவரை புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்கமுறை காரணம்.

 

ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
மெனோபாஸ் பருவம் மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது.

எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு:
1 .
எலும்பு முறிவு
2 .
மூட்டு வலி
3 .
மூட்டு வாதம்
4 .
கழுத்து எலும்பு தேய்மானம்
5 .
முதுகு எலும்பு தேய்மானம்
6 . 
முதுகு வலி
7 .
உடல் சோர்வு
8.
அசதி
9 .
முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 .
நடையில் தளர்வு இதுபோன்ற பக்க விளைவுகளால் பலரும் தமது சிரமத்திற்குள்ளாகிறார்கள்