நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே டாக்டர் சீட் கிடைத்துவிடாது! உண்மையை தெரிஞ்சிக்கங்க!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சீட் கிடைத்துவிடாது.


2018 நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் : 13.36 இலட்சம் பேர். நீட் தேர்வு எழுதியோர்:12.69 இலட்சம் பேர். தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டோர். : 7.14 இலட்சம் பேர்இந்தியாவில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் (அரசு+ தனியார்) மொத்தம் 64 ஆயிரம் மட்டுமே.

64 ஆயிரம் இடங்களுக்கு எதற்காக ஏழு இலட்சத்துப் பதினான்கு ஆயிரம் பேரை தேர்ச்சி தகுதி பெற்றதாக அறிவிக்கிறார்கள்? 12 மடங்கு அதிமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டிய தேவை என்னஅரசு மருத்துவக் கல்லூரி களில் சுமார் 30 ஆயிரம் இடங்களுக்கு  உயர்ந்த ரேங்க் எடுத்த மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள்.

ஏனெனில் அரசு மருத்துவக் கல்லூரி களில் கட்டணம் மிகவும் குறைவுமீதியுள்ள 34 ஆயிரம் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களில் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத அடுத்த நிலை ரேங்கில் உள்ளவர்கள் சேர்வார்கள் என்று  நினைத்தால் நீங்கள் ஒரு  ஏமாளி , அப்பாவி, உலகம் தெரியாதவர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணமாக 20-25 இலட்சம் ரூபாய் யாரால் கட்ட முடியுமோ அவர்களால் தான் சேர முடியும்அதற்கான வாய்ப்புகளை அதிகப் படுத்திக் கொள்ளத்தான் 7 .14 இலட்சம் பேர் வரை தகுதி பெற்றதாக  கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைத்து வைத்துள்ளனர். 

இப்போது புரிகிறதாநீட் தேர்வு தகுதி திறமையை வளர்க்க வில்லை. திறமையான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதை ஊக்குவிக்கவில்லைதனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வில்லை. என்று புரிந்து கொண்டீர்களாநீட் தேர்வுகளில் தேர்ச்சியடைந்தாலும் காசு இருந்தால் எம்பிபிஎஸ் படிக்கலாம்.காசில்லாவிட்டால் நடையைக் கட்டலாம். அவ்வளவு தான். 

நன்றி: Anbu Mani