விநாயகர் எலியை தன் வாகனமாக மாற்றி விவசாயிகளுக்கு செய்த உதவிகளை தெரிந்துகொள்ளுங்கள்!

இந்துக் கடவுளான சிவன் , அம்பாள், முருகன் என எந்த தெய்வத்தை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு அந்த வகையில் விநாயகர் என்றாலே அவருக்கு எலி தான் வாகனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


கணேஷ் பூர்ணா என்ற நூல் விநாயகரின் பல அவதாரங்களை பற்றி விளக்கமாக கூறுகிறது. இந்நூலில் விநாயகர் எலி மட்டுமில்லாமல் சிங்கம், புலி , ஆடு , மயில் என பல உயிரினங்களை தன்னுடைய வாகனங்களாக பயன்படுத்தியதாக இதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக எலியை எப்படி தன்னுடைய வாகனமாக விநாயகர் தேர்ந்தெடுத்தார் என்பதைப் பற்றியும் அதனை வைத்து எப்படி விவசாயிகளுக்கு அவர் உதவி செய்தார் என்பதை பற்றியும் இந்த நூல் விளக்குகிறது.

கணேஷ் பூர்ணா என்ற இந்த நூலில் கருஞ்சா என்னும் ஒருவரை பற்றி கூறப்பட்டுள்ளது. கருஞ்சா என்பவர் ஒரு இசை கடவுள் ஆவார். கருஞ்சா ஒருநாள் இந்திர லோகத்திற்கு சென்று உள்ளார் . அப்போது அங்கு வாமதேவா எனும் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார் தவறுதலாக வாமதேவா முனிவரின் கால்களை மிதித்துள்ளார் கருஞ்சா. இதனால் ஆத்திரமடைந்த அந்த முனிவர் கருஞ்சாவிற்கு எலி ஆக மாற வேண்டும் என்னும் சாபத்தை அளித்துள்ளார்.

இத்தகைய சாபத்தைப் பெற்ற கருஞ்சா அங்கிருந்த எல்லா பொருட்களையும் சேதமடைய செய்துள்ளார். இதனால் விநாயகர் கோபத்தினால் கருஞ்சா மீது தன்னுடைய பாசக்கயிற்றை வீசி அடக்கினார். பின்னர் கருஞ்சா, விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அதனை தன் வாகனமாக விநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.  இதுமட்டுமில்லாமல் நம்முடைய நாட்டில் விவசாயம் தான் முதுகெலும்பாக உள்ளது. ஆகையால் விவசாய நிலத்தில் எலிகள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. ஆகையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இதன் மூலம் விவசாயிகளுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது . இதனை கருத்தில் கொண்டு எலிகளை அடக்கி தன் வாகனமாக மாற்றிக் கொண்டுள்ளார் என்னும் ஒரு கதையும் கூறப்படுகிறது.