விநாயகர் முழுமுதற்கடவுள் ஆன வரலாறு!

புதியதாக எந்த செயலை ஆரம்பித்தாலும் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஏன் எந்த செயலில் ஈடுபடுவதற்கு முன்பு விநாயகரை முதலில் வணங்குகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா ?


பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் எந்த செயலும் வெற்றிகரமாக அமையும் என நம் முன்னோர்கள் கூறுவார்கள். அத்தகைய சிறப்புமிக்க விநாயகரை எதற்காக முதன்மை படுத்துகிறார்கள் என்று நாம் இப்போது பார்ப்போம். சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியின் அழகிய மேனியில் பூசப்பட்ட மஞ்சளில் இருந்து உருவாக்கப் பட்டவர் தான் விநாயகர். 

அதாவது பார்வதிதேவி அம்மையார் தன் உடலில் பூசப்பட்டு இருந்த மஞ்சளை எடுத்து அதனுள் சிறிது எண்ணெய் ஊற்றிக் குழைத்து ஒரு சிறிய உருவத்தை உருவாக்கினார். பின்பு அதன் மீது கங்கை தீர்த்தத்தை தெளித்து அதற்கு உயிரூட்டினார். மனித முகம் கொண்ட அந்த உருவத்திற்கு கணபதி என பெயர் இட்டார் .

பார்வதி தேவி அம்மையார் விநாயகரை தன்னுடைய அந்தப்புர காவலாளியாக நியமித்தார். அந்தப்புரத்தின் அருள் யாரையும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று விநாயகருக்கு கட்டளையிட்டார். இந்நிலையில் பார்வதிதேவி அம்மையாரை காண சிவபெருமான் அங்கு வந்திருந்தார். அப்போது சிவபெருமானை அந்தப்புரத்தில் நுழைவதற்கு விநாயகர் அனுமதிக்கவில்லை . இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் விநாயகரின் தலையை கொய்தார். 

இந்த செய்தியை பற்றி அறிந்த பார்வதிதேவி அம்மையார் சிவபெருமான் மீது கடும் கோபம் கொண்டார் இதனை கண்டித்து அவர் கணபதியை உடனே மீட்டு தர வேண்டும் என சிவபெருமானுக்கு உத்தரவு விட்டார். இதனால் சிவபெருமான் தன்னுடைய பூதகணங்களை அனுப்பி முதலில் கண்ணில் தென்படும் உயிரினத்தின் தலையை கொய்து வருமாறு கட்டளையிட்டார் . சிவபெருமானின் கட்டளைப்படி பூதகணங்கள் முதலில் தென்பட்ட யானையின் தலையை கொண்டு வந்தனர் . பின்னர் அந்த தலையை தலை இல்லாமல் கிடந்த கணபதிக்கு பொருத்தி உயிரூட்டிய சிவபெருமான் கணபதிக்கு இனிமேல் முழுமுதற் முதல் பூஜையை அனைவரும் செய்ய வேண்டும் என கட்டளையிட்டார். 

சிவபெருமானின் இந்த கட்டளையை அடிப்படையாக வைத்துதான் செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் முழுமுதற்கடவுளாக விநாயகரை நாம் பூஜிக்கிறோம்.