திருமணம் ஆன பிறகும் ஜோதிகாவின் நெற்றியில் பொட்டும் இல்லை, நெற்றி வகிட்டில் குங்குமமும் இல்லை..! ஏன் தெரியுமா?

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிகை ஜோதிகா தனது நெற்றியில் பொட்டு மட்டும் குங்கும் வைப்பது இல்லை ஏன் தெரியுமாஈ? அதற்கான காரணம் இருக்கிறது.


நடிகை ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா. இவரது தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர். தந்தை மராட்டியத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்தவர் தான் சாதனா. 1997ம் ஆண்டு இந்திப்படத்தில் அறிமுகமான சாதனா பிறகு தமிழில் வாலி படத்தில் நடித்தார். அப்போது தனது பெயரை ஜோதிகா என்று மாற்றிக் கொண்டார்.

இதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளப்படங்களிலும் ஜோதிகா நடித்தார். இந்த நிலையில் தான் ஜோதிகா - சூர்யா காதல் வயப்பட்டனர். இந்த காதலுக்கு சூர்யா குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது. சூர்யாவின் தந்தை சிவக்குமார் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவர் அந்த பகுதியில் சூர்யாவிற்கு பெண் தேடினார்.

ஆனால் சூர்யா பிடிவாதமாக இருந்து ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் ஜோதிகாவின் தாயார் சீமா ஒரு இஸ்லாமியர். ஆனால் அவரது தந்தை ஒரு இந்து. இருந்தாலும் ஜோதிகாவை இஸ்லாமிய முறைப்படியே அவரது தாய் வளர்த்து வந்தார்.

இதன் காரணமகவே ஜோதிகா தனது நெற்றியில் பொட்டு வைப்பது இல்லை. மேலும் வகிட்டிலும் குங்குமம் வைப்பது இல்லை. திருமணத்திற்கு பிறகு தமிழகத்தில் பெண்கள் பொதுவாக தனது நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம். ஆனால் அந்த வழக்கத்தை ஜோதிகா ஒரு போதும் கடைபிடித்தது இல்லை.

இதற்கு காரணம் ஜோதிகாவின் தாய் அவரை அப்படியே வளர்த்துள்ளார். ஒரு சில சமயங்களில் நெற்றியில் சிறிய பொட்டுடன் மட்டுமே ஜோதிகாவை பார்த்திருக்க முடியும். சில நேரங்களில் நெற்றி வகிட்டில் குங்கும் வைத்திருப்பார். ஆனால் அதனை தொடர்ந்து அவர் செய்வது இல்லை. அதே சமயம் குஷ்பு இஸ்லாமியராக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு நெற்றி வகிட்டில் குங்கும் வைத்துக் கொள்பவர்.

ஆனால் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவரு சுய விருப்பு வெறுப்புகளை ஒரு போதும் சூர்யா கட்டுப்படுத்தியது இல்லை என்பது தான்இதன் மூலம் தெரியவருகிறது.