அவுட் கோயிங் கால்களுக்கு திடீரென கட்டணம் வசூலிப்பது ஏன்? ஜியோ வெளியிட்ட வீடியோ!

இதுநாள் வரை அனைத்து அவுட் கோயிங் கால்களையும் ஜியோ இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் அவுட் கோயிங் கால்களுக்கு கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் இணைப்புகளை அழைத்தால் நிமிடத்திற்கு 6 காசுகள் என்று கட்டணத்தை ஜியோ நிர்ணயித்துள்ளது. இதற்கான காரணத்தை விளக்கி ஜியோ ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.