சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??

மிகவும் குறைந்த விலையில் கிடைத்தாலே மக்களுக்கு அதன் அருமை தெரியாது என்பதற்கு சரியான உதாரணம் கோவக்காய். ஏராளமான மருத்துவத் தன்மைகள் கோவக்காயில் நிரம்பியுள்ளன.


கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது.

•பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே கோவக்காயும் பயன்படுகிறது.

•தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, வியர்க்குரு போன்ற பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கு கோவக்காய் உதவுகிறது.

•நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்கள் தொடர்ந்து கோவக்காய் எடுத்துக்கொண்டால் கண் சோர்வு ஏற்படாது.

•நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் பளபளப்பைக் கொடுப்பதற்குமான சத்துக்கள் கோவக்காயில் நிரம்பியுள்ளன.

கோவக்காயின் சுவை பிடிக்கவில்லை என்றால் வற்றலாக அல்லது சட்னியாக செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.