முதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..? தடுப்பூசியும் நீட்டும்தான் காரணமா?

தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டு ஸ்டாலின் அச்சமும் பதற்றமும் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.


’நீட் தேர்வு கட்டாயம்’ என ஒன்றிற்கு பலமுறை உச்சநீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நீட் தேர்வால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைந்து போகக் கூடாது என்கிற எண்ணத்தில் முதல்வரின் நேரடி வழிகாட்டுதலில் உருவானதுதான் 7.5% உள் ஒதுக்கீடு.

இதனடிப்படையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டமுன்வடிவை மிகக் கவனமாக தயாரித்தது தமிழக அரசு. இந்த சட்டமுன்வடிவு, தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரிடம் தனிப்பட்ட ரீதியில் வேண்டுகோள் வைத்தார். ஐந்து அமைச்சர்களை ஆளுநரிடம் நேரில் அனுப்பியும் இது குறித்து வலியுறுத்தச் செய்தார்.

தமிழக அரசின் இத்தகைய அயராத முயற்சிகளால் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்ப்புதல் அளித்துவிட்டால் முதல்வர் எடப்பாடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்துவிடுமே என்கிற கவலை திமுக தலைவர் ஸ்டாலினை வாட்டியெடுத்து வருகிறது. இதனால்தான் ஆளுநருக்குக் கடிதம், ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் என அவர் ’படம் காட்டி வருவதாக’ பலரும் சொல்கிறார்கள்.

ஸ்டாலினின் இந்த கபட நாடகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அம்பலப்படுத்தி இருக்கிறார். இது மட்டுமா! கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பால் தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறதே என்ற அச்சத்தில் வழக்கம்போல், ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்துவதாகவும், தமிழக மக்கள் அதைப் பார்த்து எள்ளி நகையாடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி, தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக பொறாமை நோயால் ஸ்டாலின் பிதற்றிக்கொண்டிருக்க, வெற்றியை நோக்கி பொறுமையுடன் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதுதான் உண்மை.