சசிகலா வசனத்துக்கு ஏன் பயந்தார் ரஜினி? இப்படித்தான் இவரது ஆட்சியும் இருக்குமா?

டீக்கடைகளில், ரோடுகளில் பேசப்படும் சாதாரண ஒரு வசனத்தைத்தான் தன்னுடைய படத்தில் வைத்திருந்தார் ரஜினி. அதுவும் அவர் பேசவில்லை.


பிறர் பேசும்போது வேடிக்கை பார்க்கிறார். அதாவது, பணம் இருந்தால் சிறையில் இருந்து ஷாப்பிங் போகலாம் என்பதுதான் அது.பரவாயில்லையே, என்று யோசிப்பதற்குள் அந்த வசனத்தை படத்தில் இருந்து தூக்குவதற்கு ரஜினி சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒரு நேர்மையான கலைஞன்,சமுகப் பொறுப்புள்ள படைப்பாளி ஒரு போதும் சமுக விரோத சக்திகளிடம் சமரசமாக மாட்டான்!

எந்தமாதிரி பின்வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்க வேண்டும். ’’காசு கொடுத்தா ஹப்பிங் கூட போகலாம்’’ என்ற ஒரு சாதாரண நிதர்சனத்தை தான் -அதுவும் அனைவரும் அறிந்த உண்மையைத் தான் - சொல்லியுள்ள்ளார். ,வேறு எந்த புரட்சிகரமான வசனத்தையோ, புடலங்காயையோ சொல்லிவிடவில்லை! அதற்கே ஒரு அந்தர்பல்டி என்றால் எப்படி?

‘’எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ ,யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்படவில்லை. இது, சிலரது மனதை புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், படத்திலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!’’ அதாவது, சசிகலா மனதை புண்படுத்தியதால் இந்த வசனத்தை எடுத்துவிடுகிறோம் என்று நேர்மையாக ஒத்துக் கொள்ளக் கூட தயக்கம்.....!

நாளை, ரஜினி ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல் அரசியல்வாதியை அல்லது பொதுப் பணத்தை திருடியவனை கைது செய்தால் அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடும் ,ஆகவே கைது செய்யாதேர்கள்...’’ என்று காவல்துறைக்கு உத்தரவிடுவாரோ...என்னவோ!

நிஜத்தில் அல்ல, சினிமாவில் கூட ஒரு நிதர்சன உண்மையை சொல்வதில் இவ்வளவு கோழைத்தனம் இருக்குமென்றால்..., இப்படியான ஒருவரை முகமுடியாக்கிக் கொண்டு, பின்னிருந்து அவரை இயக்கி ஆளலாம் என்ற சக்திகளின் சரியான சாய்ஸ்தான் ரஜினிகாந்த் என்ற பதிவுதான் இன்றைய வைரல்.