ஹீரோ ஆனது எப்படி? சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவானது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.


ஹீரோ என்றவுடன் நீங்கள் நினைக்கும் கதாநாயகன் என்று அர்த்தம் கிடையாது. ஹீரோ என்பது சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு. விஷாலை வைத்து இரும்புத்திரை என்ற ஹிட் படத்தை கொடுத்த பிஎஸ் மித்திரனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஆகியோர் சிவகார்த்திகேயனுடன்இணைந்து நடிக்கின்றனர். கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், இயக்குனர் பி எஸ் மித்ரன், ஆகியோருக்கு நடுவில் நிற்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், திறன்மிக்க இருவருடன் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். தாங்கள் ஏற்கனவே குறும்படம் ஒன்றில் இணைந்து இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போது மீண்டும் முழு நீள படம் ஒன்றில் இணைந்திருப்பதாக சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன்  எம் ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக, இன்று நேற்று நாளை திரைப்படப் புகழ் ரவிக்குமாருடன் இவர் இணைகிறார். இவரது 16 வது படத்தை பாண்டிராஜ் இயக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.