ஆண்கள் பண்ணலாம்! நாங்க பண்ணக் கூடாதா? தீரன் பட நடிகையின் ஷாக்கிங் கேள்வி!

பிரபல பாலிவுட் நடிகையொருவர் தெலுங்கு திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


பாலிவுட்டில் கலக்கி வரும் கவர்ச்சியான கதாநாயகிகளில் ரகுல் பிரீத் சிங் ஒருவர். இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளகணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். இவருடைய கவர்ச்சியை கண்டு மயங்காத ரசிகர் வாழ இயலாது என்று ரசிகர்கள் இவரை பாராட்டியுள்ளனர்.

இவர் இறுதியாக தெலுங்கு திரையுலகின் ஜாம்பவானான நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக மன்மதுது-2 என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் டீஸரானது சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரகுல் பிரீத் சிங் புகை பிடிப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை கண்ட நெட்டிசன்கள் ரகுல் பிரீத் சிங்கை சமூகவலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். 

சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "படத்தில் அவந்திகா என்ற பெண்ணின் ரோல் செய்கிறேன். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நான் புகை பிடிப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சகர்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். பெண் எவ்வாறு புகை பிடிக்கலாம் என்றும், கலாச்சார சீர்கேடு  என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், "அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் புகைப்பிடிப்பது போன்ற பல்வேறு காட்சிகள் அமைந்துள்ளன.

அவற்றுக்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. அவரும் அந்த அர்ஜுன் ரெட்டி என்ற கதாப்பாத்திரத்திற்காக மட்டுமே புகைப்பிடித்தார். தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஷாகித் கபூர் ஒரு வெஜிடேரியன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்கள் படங்களில் புகைப்பிடித்தாலோ மது அருந்தினாலோ தவறில்லை. ஆனால் இதே காரியங்களை பெண்கள் செய்தால் சமூக சீர்கேடு என்று இழிவது எந்த விதத்தில் நியாயம்" என்று கேட்டுள்ளார். 

இந்தப் பேட்டி ஆனது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாபாத்திரங்களில் கதாபாத்திரங்களாக மட்டுமே பாவிப்பது தான் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும். இதனை ரசிகர்களும் விமர்சகர்களும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.