மிளகாய் கண்டு அச்சம் எதற்கு… சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு நல்லது

பச்சை மிளகாயை உணவில் சேர்த்தால் உடல் சூடாகிவிடும், வயிற்றில் புண் உண்டாகும் என்று பலரும் நினைப்பது உண்மை அல்ல. பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடை மிளகாய் என எல்லா மிளகாய்களும் ஒரே குணம் கொண்டவைதான்.


அளவுக்கு மீறினால் ஆபத்து என்பதை மட்டும் மனதில் கொண்டு பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால், மிகவும் நன்மை செய்யக்கூடியது.

               ·  பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை கரைக்கும்                  என்பதால் உடல் பருமனில் இருந்து விடுதலை பெறமுடியும்.

               ·   பீட்டா கரோட்டீன் என்ற வைட்டமின் சத்து மிளகாயில் அதிகம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களின்                          ஆரோக்கியத்துக்கு நல்லது.

               ·  நரம்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சொரியாசிஸ் வியாதி உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது            பச்சை மிளகாய்.

               ·  குடலை சுத்தப்படுத்தி உடலுக்கு ஓய்வு தரும் பணியையும் மிளகாய் செய்கிறது.

       சுவைக்காக மிகவும் அதிகமாக மிளகாய் எடுத்துக்கொண்டால் குடல் பிரச்னை, வயிற்றுப்புண், குடல்வால், மூலம்                ஏற்படலாம் என்பதால் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.