திருமாவிடம் பணிந்தார் ஸ்டாலின்! மிரட்டி காரியம் சாதித்த விசிக! 2 சீட் ஒதுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நிலவிவந்த குமுறல்கள் மறைந்து முதல் வேட்டையாக திருமாவுக்கு இரண்டு சீட் கிடைத்திருக்கிறது.


முன்பு மக்கள் நலக்கூட்டணியில் இணைந்திருந்த வைகோ, திருமா, இரண்டு கம்யூனிஸ்ட்கள் ஆகிய நால்வரும் தி.மு.க. கூட்டணியில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகவே இருக்கிறார்கள். இவர்களில் வைகோவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மட்டும் தலா 2 சீட்டும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திருமாவுக்கு 1 சீட் என்பதுதான் ஸ்டாலின் திட்டமாக இருந்தது.

இதனை முடிவு செய்ய கடந்த சனிக்கிழமையே ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். நான்கு கட்சிகளும் இந்த விஷயத்தில் அதிருப்தியாக இருந்ததால், யாருமே சனிக்கிழமை அறிவாலயம் செல்லவில்லை. கட்சிப் பணிகளில் பிசியாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு நான்கு கட்சிகளும் மொத்தமாக அமைதி காத்தனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கூட்டணிக் கட்சியினர் வருவார்கள் என்று தி.மு.க. ஆவலுடன் எதிர்பார்த்தது. அப்போதும் சிறுத்தைகள் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அதன் பிறகே நான்கு கட்சிகளும் ஒன்றுசேர்ந்துவிட்டதை ஸ்டாலின் உணர்ந்துகொண்டார். இந்த விவகாரம் தெரிந்ததும் ஸ்டாலின் மருமகனின் சபரீசன் கொந்தளித்திருக்கிறார்.

இப்போதே நமக்கு எதிராக கூட்டு சேர்ந்தவர்கள் யாருமே வேண்டாம், எத்தனை விலை கொடுத்தாவது விஜயகாந்தை பிடிப்போம் என்று வீரம் பேசியிருக்கிறார். இத்தனை நாட்கள் காத்திருந்தவர்களைவிட்டு, புதியவர்களுக்கு முதலில் சீட் கொடுத்ததுதான் பிரச்னை. அதனால் அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்து 2 சீட் என்று சொல்லியே அழைத்தார்கள்.

அதன்பிறகே திருமா வந்து சீட் பெற்றுக்கொண்டாராம். இப்போதே இப்படி என்றால் ஸ்டாலின் நிலை போகப்போக பரிதாபம்தான். இதனிடையே 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திருமாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது.