ஏண்டி ஆடுறத நிறுத்துன..! இளம் பெண் முகத்திலேயே துப்பாக்கியால் சுட்ட பயங்கரம்! கல்யாண வீட்டில் சம்பவம்!

பிரபல நடன பெண்ணொருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உத்திரபிரதேச மாநிலத்தில் சித்திரகூட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடந்துள்ளது. இந்த விழாவில் நடனப் பெண் ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பெண் தன்னுடைய நடனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் அந்தப் பெண்ணை தொடர்ந்து நடனமாடுமாறு வற்புறுத்தியுள்ளார். 

அந்த பெண் அந்த நபரிடம் ஏதோ கேட்டுள்ளார். உடனடியாக அவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நடன பெண்னை சுட்டுள்ளார். இந்த வீடியோவானது வெளியாகி சமூக வலைதளங்களில் பிரளயத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கிராம தலைவருக்கு உறவினர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.