சூர்யா விவகாரம்! இயக்குனர் ஷங்கர் ஏன் ஜென்டில்மேனாக நடக்கவில்லை? சின்னப்பபுத்தியா?

இயக்குநர் சங்கருக்கு இவளவு அறிவா,என்று வியந்து கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகன்,இன்று சங்கருக்கு இவளவுதான் அறிவா?,என்று சேர்த்துக்கொண்டு இருக்கிறான்.


இத்தனைக்கும் அவர் தனது ஆரம்பகாலப் படமான ஜெண்ட்டில் மேனிலேயே தனது இடத்தை ,எண்ணத்தை தெளிவாகச் சொல்லித்தான் இருந்தார்.தமிழகத்தில் இடஒதுக்கீட்டு கொள்கையால் டாக்ட்டர் ஆக முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு உயர் வகுப்புப் பையனை உதாரணம் காட்டி ஹீரோ ' கிச்சா'வின் ராபின்ஹூட் வேலைகளுக்கு நியாயம் கற்பித்திருப்பார்.அப்படி தன் கேரியரைத் துவக்கிய சங்கரிடம் இருந்து ' சூரியா பேசிய விவகாரம் குறித்து எனக்குத் தெரியாது' என்பதைத் தாண்டி என்ன தெளிவான பதிலை இந்த தமிழ் உலகம் எதிர் பார்க்கிறது?.

இப்போதெல்லாம் நாலு படம் இயக்கிய இளைஞர்கள்கூட தெளிவாக அரசியல் பேசுகிறார்கள், சங்கர் ஏன் இப்படி? என்றால் ,அவர் இப்போது மட்டுமல்ல எப்போதுமே அப்படித்தான்.அவர் பிரமாண்டமான கிராஃபிக்ஸ் படங்கள் எடுப்பதைப் பார்த்து அவரை முற்போக்கான சிந்தனையாளர் என்று நினைப்பது நமது தவறு.அவர் தனது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களை எப்படி சித்தரித்து இருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள்.கதாநாயகியாக இருந்தாலும்,காமடியாக இருந்தாலும்,கவுண்டமணி ஜெண்ட்டில்மேன் படத்தில் சொல்வது போல ' லேடிஸ் பில்லை' கள்தான் அவருக்கு.

அரசியல் குறித்த அவர் புரிதலும் டீக்கடை விவாத லெவல்தான்.ஒரு நாள் முதல்வர் போன்ற குழந்தைத்தனமான வாதங்கள்தான் அவருடையவை.அவர் ஃபாண்ட்டம் ஆஃப் த ஓப்பராவை தழுவி தமிழ் படுத்தினாலும்,அவரது ஹீரோ உலகின் முதல் ஏ.ஐ ரோபோவை உருவாக்கினாலும் சரி பிரட்சினை பெண்ணால்தான் வரும்.அதுதான் படத்தின் மையப் புள்ளியாக இருக்கும்.அவர் ஒருநாளும் சமூகப் சிக்கல்களை பேசியவர் அல்ல.நாற்சந்தியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போவதாகக் கூட்டத்தைக் கூட்டி சில்லரை பார்த்துக் கொண்டிருப்பவர்.உண்மையிலேயே தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாதுதான்.தொழில் நுட்பத்திலும் அப்படித்தான்.

ராஜமெளலி ரசிகர்களிடம் ஏற்படுத்திய பிரமிப்பை அதே பட்ஜெட்டில் படமெடுக்கும் சங்கரால் நெருங்கக்கூட முடியாததை கவனியுங்கள். அவரது பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு பட்ஜெட்டில் படமெடுக்கும் கார்த்திக் சுப்புராஜ்,ரஞ்சித் போன்ற இளைஞர்கள் காட்டிய ரஜினிக்கும் சங்கரின் ரஜினிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பெரிய நிறுவனங்களின் பணத்தையும்,நல்ல நடிகர்களின் நேரத்தையும் வீனடித்து ரசிகர்களுக்கும் ஏமாற்றம் தரும் வெள்ளை யானைதான் சங்கர்.நவீன சிந்தனைகள் ஏதும் அறியாத ஒரு பிற்போக்கான மனிதரிடம் சூரியா போன்ற இளைஞர்களின் பேச்சுக்கு வேறென்ன எதிர்வினையை எதிர் பார்க்க முடியும்.பாவம் சங்கர்,அவரை விட்டுவிடுங்கள்.