திட்டமிட்டு வன்னியர்களை புறக்கணிப்பது ஏன்..? ஸ்டாலினுக்கு எதிராக கிளம்பும் ஜாதி போராட்டம்

தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ள வன்னியர் குல சத்திரியர் சமூகத்தின் சார்பில் சி.ஆர்.ராஜன், பிஇ,கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.


தி.மு.க தலைமை வன்னியர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று எம் சமூக மக்கள், வளைதளங்கள், வாட்ஸ் மூலம் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், பொதுச் செயலாளராக திருமிகு , துரைமுருகன் அவர்கள் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டத்தின் மூலம் இதற்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. என்று நினைத்தோம். 

இப்பொழுது மேலும் இரண்டு துணை பொதுச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அவர்கள் அறிவித்ததை நாங்கள் குறை சொல்லவில்லை, மேடையில் அமர்ந்த புகைப்படத்தை பார்த்த போதுதான், தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட இவர்கள் தான் தலைமை பீடம் என்று தெரிந்துக் கொண்டோம், அதில் பொருளாளர், திரு, டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் திண்டுக்கல் திரு,பெரியசாமி இருவரும் முக்குலத்தோர், திரு, ராஜா, (P.R)திரு, அந்தியூர் செல்வராஜ் (அருந்ததியர் ) இருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.

மேலும், திரு,க.பொன்முடி (உடையார்), திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் (கொங்கு வேளாளர்) தலைமை நிலையச் செயலாளர்திரு .R.S பாரதி (முதலியார்) முடிவு எடுக்கின்ற அதிகாரம் இவர்களிடத்தில் தான் இருக்கிறது என்று தெரிய வருகிறது.இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அதே நேரத்தில் முக்குலத்தோருக்கு கொடுத்த அந்தஸ்தை நாங்கள் குறைச் சொல்லவில்லை, வட தமிழகத்தில் 120, சட்டமன்ற தொகுதி, 21 மக்களவை தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய குல சத்திரியர்கள் சமூகத்தை சேர்ந்தவர் களுக்கும் தலைமை அளவிலும், மாவட்டச் செயலாளர்களாகவும் உரிய பொறுப்புகள் வழங்கபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொடுத்தே தீர வேண்டும் வேறு வழியேயில்லை என்ற அடிப்படையில் 2011 -ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டிவனத்தில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் குல சத்திரிய சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு மூலம் எண்ணிக்கைக்கு ஏற்ப,தனி ஒதுக்கீடு வழங்குவேன் என்று உறுதியளித்தார் (அப்பொழுது மேடையில் இருந்த டாக்டர் ராமதாஸ் அவர்கள் முகம் சுருங்கியது என்பது வீடியோ பதிவை பார்த்தாலே தெரியும் இது வேறு விஷயம்)

தி .மு . க தலைவர், உயர்திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பு, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னிய குல சத்திரிய சமூகத்திற்கு கலைஞர் அறிவித்த போல தனி உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்றும் ஒரு படிமேலே சென்று இட ஒதுக்கீடு தியாகிகளுக்கும், ஏ. கோவிந்தசாமி அவர் களுக்கு மணிமண்டபம் அமைப்போம் என்று உறுதியளித்து நீண்ட அறிக்கையும் , பின்னர் பிரச்சார கூட்டத்திலும் பேசினார்.

அதன் பின் இது குறித்து இதுவரை தி.மு.க தலைவர் எதுவும் கூறவில்லை, அதன் பின் நடந்த செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்த பொதுக்குழுவில் கூட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, ஆனால் வாக்குறுதி கொடுத்தவன்னியர்களின் கோரிக்கைகள் தீர்மானமாக போட தாது ஏன்? என்று கேட்டுக்கொண்டுள்ளார்.