திடீரென நிறுத்தப்பட்ட கவுண்டவுன்! விண்ணில் பாயாத சந்திராயன் 2! அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாரான சந்திராயன் 2 விண்கலம் திட்டமிட்டபடி இன்று அதிகாலை விண்ணில் பாயவில்லை.


நிலவுக்கு ஆய்வு ஊதியை அனுப்பும் இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு சந்திராயன் 2 என பெயரிடப்பட்டது. இதுவரை நிலவில் எந்த நாடும் ஆய்வூர்தியை இறக்காத நிலவின் தெற்கு பகுதியில் சந்திராயன் 2 விண்கலனை இறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

சந்திராயன் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட தயாராக இருந்தது. இதனை காண இந்தியகுடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திற்கு வந்திருந்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் கவுண்டவனும் நடைபெற்று வந்தது. சரியாக 2.51 மணிக்கு சந்திராயன் 2வுடன் ராக்கெட் விண்ணில் பறக்கவில்லை. இதனால் செய்தியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது.

பிறகு 12 நிமிடங்களுக்கு பிறகு சரியாக அதிகாலை 3.03 மணிக்கு சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதை நிறுத்தி வைப்பதாக இஸ்ரோ ட்விட்டரில் பதிவிட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2 ஏவப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏமாற்றம் அடைந்தார். சந்திராயன் 2 எப்போது விண்ணில் பறக்கும் என்கிற தகவைல தற்போது வெளியிடவில்லை.