தற்கொலை முயற்சி..! 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத பாக்யராஜ் மகள்..! அதிர வைக்கும் காரணம்!

இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வருவது ஏன் என்ற காரணம் வெளியாகியுள்ளது.


பிரபல இயக்குனர் நடிகர் பாக்யராஜ் பல்வேறு வெற்றி படங்களை இயக்கியும் நடித்தும் தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். பாக்யராஜ் அவர்களின் குடும்பத்திலுள்ள அனைவருமே திரைஉலகில் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் இயக்கி நடித்த டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பூர்ணிமாவை நடிகர் பாக்கியராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதேபோல பாக்யராஜின் மகன் சாந்தனு பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியின் மகளான கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தியும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். அதேபோல பாக்யராஜின் மகள் சரண்யாவும் சில வருடங்களுக்கு முன்பு வந்த பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. தற்போது 35 வயதாகும் பாக்யராஜ் மகள் சரண்யா இதுவரை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்யராஜின் மகள் சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு இளைஞரை பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும்,  இவருடைய காதலுக்கு சரண்யாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தாலும் கூட சரண்யாவின் காதலர் நிலையாக இல்லாமல் போனதால் சரண்யாவின் காதல் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளான நடிகை சரண்யா காதல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை முயற்சியிலும் சரண்யா ஈடுபட்டார் எனவும் கூறப்படுகிறது.

தற்போது 35 வயதாகும் தன் மகளுக்கு இன்னமும் திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என அவர்களின் பெற்றோர்களான பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதியினர் மனதில் கவலையோடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் சரண்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருவதால் அவர் படிப்பை காரணம் காட்டி அமெரிக்காவில் அவருக்கு பிடித்த படிப்பு ஒன்றை தேர்வு செய்து அங்கேயே இருந்து படித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.