நான் தமிழச்சி! பிக்பாஸ் வீட்டில் கையை அறுத்துக் கொண்டது ஏன்? மதுமிதா கூறிய திடுக் காரணம்!

பிக்பாஸ் வீட்டில் இருந்த மதுமிதா தற்கொலைக்காக தன் கையை அறுத்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பாராத வகையில் சென்ற வாரம் மதுமிதா வெளியேற்றப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. ஏனெனில் பிக்பாஸ் வீட்டின் விதிமுறைப்படி, ஒருவர் தன்னைத்தானே கொடுமைப்படுத்தினாலோ இல்லை பிற போட்டியாளர்களை உடல் ரீதியாக கொடுமைப்படுத்தினாலோ அவர்கள் வெளியேற்றப்படுவர். அதன்படி நான் மதுமிதாவும் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, வேற ஒரு நிகழ்வினால் தான் மதுமிதா கையை அறுத்து கொண்டார் என்றும் தற்கொலைக்காக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு டாஸ்கில் மதுமிதா, "கடவுள் கூட கர்நாடகர்களை போன்று தண்ணீர் தராமல் அடம்பிடிக்கிறார்" என்று ஒரு வார்த்தையை கூறினார். இது பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த ஷெரீனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அவர் பதிலடி கொடுக்கும் வகையில், "இங்கே எதுக்கு கர்நாடகா தமிழ்நாடுன்னு பிரச்சனையை செய்றீங்க" என்று கூறியுள்ளார். உடனே வத்திக்குச்சி வனிதா, "ரசிகர்களிடம் ஓட்டு வாங்குவதற்காகவே மதுமிதா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றார். மக்களின் மனங்களில் விளையாடுவது மதுமிதாவுக்கு கைவந்த கலை" என்று கூறினார்.

தான் கூறியது உண்மை என்பதை நிரூபிப்பதற்காக மதுமிதா தன் கையை அறுத்துக்கொண்டார். அப்போது வெளியான ரத்தத்தை அனைவரிடமும் காண்பித்து, "இந்த ரத்தம் போன்று என்னுடைய வார்த்தைகளும் உண்மையானவை" என்று கூறினார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சினிமாவில் நடப்பது போன்றே அமைந்திருந்தன.

மதுமிதா தன்னைத்தானே கத்தியால் அறுத்து கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.