நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆகவே இருப்பார்.
ஏன் இந்த விளம்பரம்? கஸ்தூரியை சீண்டும் முஸ்லீம்கள்!

கஸ்தூரி சினிமா துறையில் நீண்ட நாட்களாக நடைபெறும் பிரச்சனைகளுக்கு எதிராக தைரியமாக தனது கருத்துக்களை கூறுபவர். இதனால் சில காலங்களாகவே நடிகை கஸ்தூரி தலைப்பு செய்திகளில் வந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் வெளிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் நடிகை கஸ்தூரி முஸ்லிம் பெண்களை போல படுதா அணிந்து பிரேயர் செய்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். மேலும் அந்த போட்டோவில் "எல்லோரும் ஒரே மாதிரியான வேண்டுதலை தான் வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு கடவுளை வணங்குகிறோம்" என்றும் கேப்சன் செய்துள்ளார்.
இந்த போட்டோவை கண்ட ரசிகர்கள் சிலர் நடிகை கஸ்தூரி இஸ்லாமிய இனத்திற்கு மாறிவிட்டாரா எனவும், மேலும் சிலர் ரம்ஜான் பண்டிகைக்கு இஸ்லாமிய இனத்திற்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காகவா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் நடிகை கஸ்தூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் போட்டோவாக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். அனால் எதற்காக முஸ்லீம் பெண்ணை போல வேடம் அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார் என்பதை நடிகை கஸ்தூரி தான் விளக்க வேண்டும்.