பிரதமரை கல்லால் அடிக்க வேண்டும் என்று கூறிய ஜோதிமணி 3ம் தர பொம்பளை இல்லையா? நியுஸ் 7ல் நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை கல்லால் அடிக்க வேண்டும், அடிப்பேன் என்று கூறிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் பேச்சு 3ம் தர பெண்ணின் பேச்சு இல்லையா என்று கரு. நாகராஜன் கொதித்துக கொண்டிருக்கிறார்.


நியுஸ் 7 தொலைக்காட்சியில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவலம் குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை பாஜக செய்தி தொடர்பாளர் கரு நாகராஜன் மிக கடுமையான வார்த்தைகளில் விவரித்தார். ஜோதிமணி ஒரு கேவலமான பெண், அவர் மூன்றாம் தர பெண் என்பது தனக்கு தெரியும் என்று நாகராஜன் பேசிய வீடியோ வைரல் ஆனது.

ஒரு பெண்ணை அதிலும் காங்கிரஸ் கட்சியின் எம்பியான ஜோதிமணியை எப்படி கரு நாகராஜன் 3ந் தர பொம்பளை என்று கூறலாம் என சமூக வலைதளங்களில் மோடி எதிர்ப்பார்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதற்காக நாகராஜன் இப்படி பேசினார் என்பதை அனைவரும் வசதியாக மறந்துவிட்டனர்.

மேலும் ஜோதிமணியை ஆபாசமாக கரு நாகராஜன் பேசும் வீடியோவை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நாகராஜன் அப்படி பேசுவதற்கு முன்னதாக ஜோதிமணி என்ன பேசினார் என்பதை மறைத்துவிட்டார்கள். பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று அந்த விவாதத்தில் பேசியுள்ளார் ஜோதிமணி.

அதாவது நாட்டின் பிரதமரை ஒரு எம்பி கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசுகிறார். மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை ஜோதிமணி கொண்டிருக்கலாம். மோடியின் கொள்கைகள் அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர் பிரதமர் பதவியில் நீடிப்பதால் ஜோதிமணிக்கு எரிச்சல் இருக்கலாம். ஆனால் பல கோடி மக்களால் பிரதமராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் மோடி.

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக மோடி திகழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரை கல்லால் அடிக்க வேண்டும என்று ஜோதி மணி பேசுகிறார். இதனை கேட்டு தன்னிலை மறந்து கரு நாகராஜன் ஜோதிமணியை மூன்றாம் தர பொம்பளை என்று விமர்சிக்கிறார். பிரதமரை கல்லால் அடிக்க வேண்டும் என்று கூறுவது மூன்றாம் தர பேச்சு இல்லையா? என்பது தான் கரு நாகராஜனின் ஆதங்கம்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்விணை உண்டு. மோடியை கல்லால் அடிப்பேன் என்று மூன்றாம் தரமாக பேசினால் மூன்றாம் தர பெண்மணி என்று தான் கூற முடியும் என்றும் கரு நாகராஜன் விளக்கம் அளிக்கிறார். எது எப்படியோ இந்த விவகாரத்தில் கரு நாகராஜன் இப்படி வரம்பு மீற காரணம் ஜோதிமணியின் திமிர் பேச்சு தான் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.