கொரோனா பூச்சாண்டி இந்தியாவில் பலிக்காதது ஏன்..? அமெரிக்காவே ஆடிப்போன பரபர பின்னணி!

அமெரிக்கா இத்தாலி போன்ற வல்லரசு நாடுகளை அதிகளவில் தாக்கிய நிலையில் இந்தியாவில் மற்றும் அதன் தாக்கம் குறைந்திருப்பதற்கான காரணங்கள் நம்மளை மெய்சிலிர்க்க வைக்கின்றன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 73,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் பேரழிவை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் அந்த நோயின் தாக்கம் குறைவாக காணப்படுவதற்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றன. 

முதலில், நம் நாட்டில் பல ஆண்டுகளாக மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையில், உடலில் ஏகப்பட்ட வைரஸ் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர்களுடைய உதவியை இதுபோன்ற கிருமிகளுக்கு எதிராக போராடக்கூடிய சக்தி அதிகளவில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

2-வதாக, இந்த நோய் தாக்குதலை மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய "ஹைட்ரோகுளோரோ குயினைனைன்" என்ற மருந்து அதிகளவில் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. நம் மக்கள் இந்த மருத்துவ பொருளை இதுவரை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த மருந்தின் வீரியமானது இந்தியர்களின் ஊடகங்களில் அதிகளவில் தங்கியிருப்பதால் இதுவரை நோய் தாக்குதல் பரவலாக ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

3-வதாக இந்தியர்கள் பாரம்பரியமாக தங்களுடைய உணவு முறையில் திப்பிலி, மஞ்சள், மிளகு ஆகிய பொருட்களை அதிக அளவில் உபயோகப்படுத்துகின்றனர். இவை மருத்துவ குணம் நிறைந்ததால் நோய்த் தாக்கத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் கபசுர குடிநீர் போன்ற சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் இந்த நோய் தாக்கத்தை அதிகளவில் குறைத்து வருவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஆகையால், நாம் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு வருவதால் நோய் தாக்கம் மிகவும் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.