பிரமாண்டமாக நடந்து முடிந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் 7! பட்டம் வென்றது யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் சீசன் 7 இறுதி நிகழ்ச்சியானது நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் விமரிசையாக நடைபெற்றது.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் நெடுங்காலமாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியானது "சூப்பர் சிங்கர்". இந்த நிகழ்ச்சி சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒவ்வொரு வருடத்திலும் மாறி மாறி நடக்கும்.

இந்நிலையில் நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொடிசியா மைதானத்தில், "சூப்பர் சிங்கர் சீசன் 7" இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டிக்கு சாம் விஷால், புண்யா, மூக்குத்தி முருகன், கௌதம் மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

இந்நிலையில் நேற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி சாம் விஷால் மற்றும் புண்யா 3-வது இடத்தை தட்டி சென்றனர். 2-வது இடத்தை விக்ரம் பெற்றார். "சூப்பர் சிங்கர் சீசன் 7" நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டார்.

மூக்குத்தி முருகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன. இன்னொருபுறம் இலங்கையை பூர்வீகமாக கொண்ட புண்யா வெற்றி பெறாதது இலங்கை தமிழர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியானது கொடிசியா மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.