பிரதமர் மோடியின் மடியில் தவழ்ந்து விளையாடிய சுட்டிக்குழந்தை! யார் தெரியுமா?

இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் ஒரு கைக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போன்று வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாட்டின் பிரதமராக 2-வது முறை பதவி வகிக்கும் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு கைக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கின்றார். அந்த புகைப்படத்தின் கீழ், "என்னை பாராளுமன்றத்தில் சந்திப்பதற்கு மிகவும் சிறப்பான நண்பர் வந்துள்ளார். அவருடன் மகிழ்ச்சியாக விளையாடினேன்" என்று பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 1 மணிநேரத்திற்குள்ளே 5 லட்சம் லைக்குகளை பெற்றார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பாராட்டியுள்ளனர். நெட்டிசன்கள் சிலர் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மாவின் மகளாக இருக்கக்கூடுமென்றும், சிலர் இந்திய நாட்டின் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரனாக இருக்கக்கூடும் என்றும் வியூகித்து வருகின்றனர்.

ஆனால் அந்த குழந்தை பாஜக எம்பி சத்தியநாராயணா ஜைத்யா என்பவரின் பேத்தி என்பது பிறகு தான் தெரியவந்து. இன்று பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்ள வந்த போது பிரதமரிடம் குழந்தையை கொடுத்து ஆசி பெற்றுள்ளார் சத்தியநாராயணா.