கடைசியாக ரூ.1000 கடன்! மகனின் ஆசையை தீர்த்த தம்பதி! பிறகு எடுத்த விபரீத முடிவு! கலங்க வைக்கும் காரணம்!

மகனின் பள்ளிக் கட்டணத்தை, வீட்டு வாடகை மற்றும் இதர குடும்பச் செலவுகளையும் சமாளிக்க இயலாததால் குடும்பம் முழுவதும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகை மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள கொட்டிபாளையம் தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரின் வயது 45. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை செய்யும் ஆசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இருவரும் குதூகலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெகதீஷ் என்ற மகன் உள்ளார் அவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஜெகதீஷ் புதிய கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். எதிர்பாராவிதமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிக்கு விபத்து ஏற்பட்டது. விபத்தினால் ஏற்பட்ட காயங்களை நீக்க மருத்துவ செலவு அதிகரித்ததால் செந்தில்குமார் கடன் வாங்கினார்.

மேலும் மகனின் பள்ளி படிப்பு, இதர இல்லத்தர செலவுகளை சமாளிப்பதற்கு மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருந்தார். இந்நிலையில் சமீப காலத்தில் செந்தில்குமாருக்கு கடன் வழங்கியோர் அவரது இல்லத்திற்கு வந்து கூச்சலிட்டு பணத்தை கேட்பது வழக்கமாக இருந்தது. இதனால் தம்பதியினர் பெரிதும் அவமானபட்டனர். அவமானத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டில் மிகவும் அவசரம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். தங்கள் மகன் ஜெகதீஷுக்கு காவல் உடை வாடகை எடுத்து அணிவித்து மகிழ்ந்தனர். ஏனென்றால் சிறுவயதிலிருந்தே ஜெகதீஷ் காவல் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். அவ்வாறே செய்து அவரை இறுதியாக மகிழ்வித்தனர். 

பின்னர் மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.