பிலே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற போவது யார்? மும்முனை போட்டியில் வெல்ல போவது எந்த அணி?

பரபரப்பான கட்டத்தில் ipl போட்டியின் பிலே ஆஃப் சுற்றில் நான்காவது அணியாக எந்த அணி நுழைய போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பிலே  ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக எந்த அணி தகுதி பெரும் என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று ipl இல் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. 

நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்ததால் 12 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் சன் ரைசர்ஸ் அணி பிலே  ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு சற்று குறைவே.

இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் பிலே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்று விடும். ஒரு வேலை இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி பெற்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் இருக்கும். பின்னர் நெட் ரன் ரேட் அடிப்படையில் 4வது அணி தேர்வு செய்யபடும். நெட் ரன்  ரேட் அடிப்படையில் பார்த்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம். இந்த கணிப்புகள் எல்லாம் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி பெற்றால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிலே  ஆஃப் ரேஸில் KKR , SRH அணிகளை தவிர KXIP பஞ்சாப் அணிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. KXIP அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் போட்டியில் மிகவும் சூப்பர் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் நல்ல ரன் ரேட் இருந்தால் KXIP  அணி பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று விட்டால் எந்த தடையுமின்றி பிலே  ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.