சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

மிகவும் குறைந்த விலையில், எங்கேயும் எப்போதும் கிடைக்கக்கூடிய உணவுப் பொருளான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுவையானது மட்டுமல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது.


·         சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

·         உடல் குண்டாக ஆசைப்படுபவர்கள் தினமும் இந்தக் கிழங்கை உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால், ஊட்டம் அதிகரித்து உடல் எடை கூடும்.

·         பீட்டா கரோட்டீன் மூலக்கூறு நிரம்பியிருப்பதால் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை கொண்டது என்பதால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.