பெண் டாக்டரை சீரழித்த 4 பேரையும் போட்டுத் தள்ளிய ஹீரோ! யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்? கொண்டாடும் மக்கள்!

கமிஷனர் விசி சஜ்னார் தலைமையில்தான் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.


2008ல் ஆந்திர பிரதேசத்தில் 3 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த எஸ்.பி விசி சஜ்னார்தான் தற்போது கமிஷனராக பதவி ஏற்றுள்ளார்.

 ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று அதிகாலை மூன்று 3:30 அளவில் என்கவுண்டர் செய்யப்பட்டனர். 

இந்த குற்றவாளிகள் 4 பேரும் கடந்த 27ஆம் தேதி புதன்கிழமை மாலை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது உடலை தீயிட்டுக் கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவமானது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நான்கு குற்றவாளிகளையும் எண்கவுண்டர் செய்வதற்கு ஹைதராபாத் கமிஷனர் விஜி.சஜ்னார் அனுமதி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் பெண் மீது ஆசிட் வீசிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீனிவாச ராவ், ஹரிகிரிஷ்ணா, சஞ்சய், ஆகிய மூன்று குற்றவாளிகள் மீது அன்றைய எஸ்பியாக பதவி வகித்து வந்த விசி சஜ்னார் வழக்கை விசாரித்து வந்தார்.

விசாரணையின் போது அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர் . ஆகவே அவர்கள் மூவரையும் என்கவுண்டரில் கொலை செய்த பெருமைக்குரியவர் இவர் தான். இதனால் அந்த மாநிலத்தின் மக்களிடையே இவர் மிகப் பெரிய ஹீரோவாக வலம் வந்தார்.

இப்போது அதே போல் மிகப் பெரிய பாலியல் குற்றத்தை செய்த நான்கு பேரையும் அதிரடியாக என்கவுண்டரில் கொலை செய்வதற்கான உத்தரவையும் பிறப்பித்து தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் அதே ஸ்டைலில் இன்றையதினம் என்கவுண்டர் நடந்திருப்பது சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது . இருப்பினும் இந்த என்கவுண்டர் மூலம் அந்த மருத்துவரின் ஆன்மா சாந்தி அடையும் என்று மருத்துவரின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போலீஸ் கமிஷனருக்கு நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.