கமலா? யாரது? மநீ மய்யத்தை சென்னையில் பங்கம் செய்த சு.சாமி!

விமான நிலையத்தில் சுப்ரமணிய சுவாமி பேட்டி.7 பேர் விடுதலை ஒருநாளும் நடக்காது. விடுவிக்க விடமாட்டோம்.


தீர்மானம் இயற்றட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நியாயமாக மரண தண்டனை கிடைத்திருக்க வேண்டும். ராஜுவ் காந்தியை கொலை செய்த தீவிரவாதிகள் அவர்கள். 

ரஜினி தான் தேர்தலில் நிற்கமாட்டாரென ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். கமலா? யார் அது? பீகார்,  உ.பி பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். 5 சீட்டுகளுக்காகவெல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. 

 யார் யாருக்கு சீட் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே பாஜக - அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து சொல்ல முடியும்.