பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3ல் யார் எலிமினேட் செய்யப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .
இந்த வாரம் எலிமினேசன் இவர் தான்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்சி! சற்று முன் வெளியான தகவல்!

இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி , லாஸ்லியா இவர்களுக்கிடையேயான பிரச்சனை பெரிதாக நிலவி வந்தது . ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . தனது கருத்தை தெரிவித்த சேரனிடம் , தேவையில்லாமல் சரவணன் கோபத்தை வெளிப்படுத்தினார் . இதனால் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் , சாக்ஷி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியிடப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது . வழக்கமாக ஞாயிறன்று தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேசன் நடைபெறும்.
ஆனால் அதற்கான சூட்டிங் சனிக்கிழமையே முடிந்துவிடும். அந்த வகையில் நாளைய நிகழ்ச்சிக்கான சூட்டிங் முடிந்துவிட்டது. அதன்படி சாக்சி குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.