பித்ருக்கள் யார்? பித்ரு தோஷம் ஏன் வருகிறது?

நம் தாய் தந்தையர் அதற்கு முந்தைய அவர்கள் தாய் தந்தையைர், அவர்களுடைய தாத்தா பாட்டிகள் என நம்முடைய மூதாதையர்களைக் குறித்கும் வார்த்தையே பித்ருக்கள்.


இந்தப் பித்ருக்களின் தோஷம் மூன்று தலைமுறையை பாதிக்கும் என்பர்.  நம் மூதாதையர்கள் இறந்தபின் அவர்கள் பித்ரு உலகத்திற்கு சென்றுவிடுவார்கள். அவர்கள் நமக்கு ஒரு கஷ்டம் என்றால் அங்கிருந்து வந்து நம்மை காப்பார் என்பது ஐதீகம். ஆனால் அவர்களால் நம்மை காப்பாற்ற முடியாத சூழல் என்றால் அதற்கு அவர்கள் செய்த பாவங்களே காரணம். 

பூட்டன், பூட்டி, தாத்தா, பாட்டி, தாய், தந்தை என இப்படி தலைமுறை தலைமுறையாக நம்முடைய முன்னோர்களின் சொத்துக்கள் அவர்களுடைய மகன் மற்றும் மகள் வழியாக பேரன் பேத்தி வகையினருக்குச் சென்றடைகிறது. இதில் உள்ள ஒரு உண்மை என்னவென்றால் நான் எப்படி தமது மூதாதையர்களூடைய சொத்துக்களை அனுபவிக்கிறோமோ அதேபோல் அவர்கள் செய்த பாவங்களையும் நிச்சயமாக நாம் அனுபவித்தே தீரவேண்டும். 

பித்ருக்கள் செய்த பாவங்கள் தான் தோஷம் என்று சொல்லப்படுகின்றன. அதாவது அவர்கள் அவர்களுக்குத் தெரியாமல் மற்றவர்களுக்கு செய்துவிட்ட தீங்கு, மற்றவர்களை மனம் நோக வைத்தது உள்ளிட்ட பாவங்கள். உதாரணமாக, ஒருவரின் தாத்தா, இன்னொருவர் சொத்தை அநீதியாகக் கொள்ளையடித்ததாகவோ தவறான வழியில் சம்பாதித்ததாகவோ இருக்கலாம் அல்லது ஒரு பெண்ணுக்கு அநீதி இழைத்து விட்டு அதை மறைத்த காரணத்தால் அந்தப் பெண்ணின் சாபத்தை பெற்றிருக்கலாம்.

அல்லது மற்றவர் மனைவியின் மீதோ அல்லது அடுத்தவருடைய கணவன் மீதோ இச்சைப் பட்டிருக்கலாம். அல்லது சூதாட்டத்தின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். அதனால் சூதாட்டத்தில் ஏமாந்தவரின் குடும்பத்தினர் சாபம் விட்டு இருக்கலாம். அதாவது நம் மூதாதையர் தீய வழியில் சம்பாதித்து இருந்தாலோ தீய வழியில் நடந்திருந்தாலோ தன்னை அறியாமலேயே யாருக்காவது தீமை செய்து இருந்தாலோ நிச்சயமாக இந்த பித்ரு தோஷம் அவருடைய வாரிசுகளுக்கு வந்து சேரும்.