கொரோனாவுக்கு முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது யார்..? மிரட்சியில் பா.ஜ.க. தலைவர்கள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது.


இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான ஒப்புதல் வழங்கபட்டு உள்ளது.

இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு, மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடைபெறும் முக்கியமான தேர்தல்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் செல்வாக்கை பெற தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், தடுப்பூசி கண்டறிய குறைந்தது 1 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், உடடினியாக அறிவிப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம். தேர்தலை கணக்கிட்டு கொண்டுவரும் தடுப்பூசி என்பதால், இதனை முதன்முதலில் பா.ஜ.க. தலைவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இப்படியொரு கோரிக்கை எழுந்ததையொட்டி, பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. முதல் ஊசி போட்டுக்கொள்ளும் பா.ஜ.க. தலைவர் யாரோ..?