நித்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய அமித் ஷா..? வைரலாகும் புகைப்படத்தின் பரபர பின்னணி!!!

நித்தியானந்தாவின் காலில் விழுந்து அமித்ஷா ஆசிர்வாதம் வாங்குவது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா உலக அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறார். இவர் ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளது ஆகவும், அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறி வைரலானார்.

இதனிடையே தற்போது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆறு ஆசிர்வாதம் வாங்குவது என்பது சரிவர தெரியாததை உபயோகப்படுத்தி கொண்ட சிலர் அது உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்த சமூக வலைதளங்களில் சரிவர ஆராய்ந்து பார்த்தபோது, நித்யானந்தாவின் காலில் விழுவது  வெளியுறவு தூதரக அதிகாரிகள் ஜெகதீஷ்வர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பெங்களூருவில் நடந்துள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆகையால் நித்யானந்தாவின் காலில் விழுந்து வணங்குவது உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லை என்ற உண்மை அனைவருக்கும் புரிந்துள்ளது. இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.