காஷ்மீர் பண்டிட்களை அகதிகளாக விரட்டியது யார்? மீண்டும் காஷ்மீர் திரும்ப பண்டிட்கள் தயாராக இருக்கிறார்களா..?

பக்டூன்கள் படையெடுப்புக்கு பயந்து பண்டிட் இண மக்கள் காஷ் மீரை விட்டு வெள்யேறி இருந்தாலும்,அதன் பிறகு...


மீண்டும் வெளியேறக் காரணமாக அமைந்தது பிஜேபியைச் சேர்ந்த தில்கா லால் டப்லூ என்கிற வழக்குரைஞர் கொலையில் இருந்துதான்.அந்த சம்பவம் நடந்தது 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி.அதாவது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து 42 வருடஙுக்குப் பிறகு.இந்தக் கால கட்டத்துக்கு முன்பே காஷ்மீரில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ்,ஜனசங்க ஆட்கள் அங்கே' ஜம்மு பிரஜா பரிஷத்' என்கிற இந்து மதவாத இயக்கத்தை துவங்கினர்.

இதுதான் ஆரம்பம்,என்பதுகளின் இறுதியில்தான் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஹஜ்புல் முஜாகிதீன் பலம் பெருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஜனநாயக வழி அரசியலில் பலம் பொருந்திய தலைவர்களாக இருந்த ஃபரூக் அப்துல்லாவும்,முஃப்தி முகமது சையதும் தங்கள் போட்டியில் இரு தரப்பையும் பகடைக்காய்களாக பயன்படுத்தி வந்ததுதான்.

இதன் தொடர்ச்சியாக 1990 ஜனவரி 4ம் தேதி ,பிரபல உருது நாளிலதான ' அஃப்டாபில்' ஹிஜ்புல் முஜாகிதீன் இயஜ்கம் ஒரு அறிக்கையை வெள்யிட்டது.அந்த அறிக்கை , இனிமேல் காஷ்மீரில் வாழும் இந்துக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று மறை முகமாகச் சொன்னது.வி.பி சிங் ஆட்சியில் காஷ்மீர் கவர்னராக நியமிக்கப்பட்ட ஜக்மோகன் தன் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

காஷ்மீரில் வாழும் இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு தரமுடியாது,ஆகவே வெளியேறுங்கள் என்றது.அப்போதுதான் காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் ஆரம்பித்தது.மூன்று முதல் ஆறு லட்சம் மக்கள் வெளியேறி இருக்கலாம்.அப்படி வெளியேறிய பண்டிட்கள்,டெல்லி,மகாராட்டிரா,குஜராத் மாநிலங்களில் பெருமளவு தஞ்சம் புகுந்தனர்.

பாகிஸ்த்தான் பிரிவினை,வங்க விடுதலை,பர்மிய அகதிகள் என யாருக்கும் காட்டாத சலுகைகள் காஷ்மீர் பண்டிட்களுக்கு வழங்கப்பட்டன.டெல்லி மும்பை,அகமதாபாத் நகரங்களில் அவர்களுக்கு வீடும்,கடைகளும் இலவசமாக ஒதுக்கப்பட்டன.காஷ்மீரில் அரசு ஊழியராக இருந்து அகதியாய் வந்தவர்களுக்கு,எந்த வேலையும் செய்யாமலே அதே சம்பளம் மாதந்தோறும் வழங்கப்பட்டது.

இப்படி அவர்களை ஆதரிக்க ஒரே காரணம் காஷ்மீரை ஒடுக்க மதவாதம் என்கிற ஆய்தமாக பண்டிகள் பயன்படுவார்கள் என்பதுதான்.நேற்றைய அமித்ஷாவின் அறிவிப்புக்குப் பிறகு பண்டிட் இண மக்கள் இனி நாங்கள் கவுரவமாக நாடு திரும்புவோம் என்று மகிழ்சி தெரிவித்து இனிப்பு விநியோகித்து இருக்கிறார்கள்.

ஆனால் இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் வாழ்ந்துவிட்ட அவர்கள்,திரும்பவ காஷ்மீர் போனால் அவர்களின் சிதைந்துபோன வீடுகளைத் தவிர வேறு என்ன இருக்கிறது. வேலை வாய்ப்பு இல்லை,தொழில் துவங்கும் சூழல் இல்லை.ஆகவே , பண்டிட்களை மீண்டும் குடியேற்ற அரசு என்ன செய்யப் போகிறது என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.